இன்று அண்ணா அறிவாலயத்தில் தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டம்

SHARE

சட்டசபை தேர்தல் நெருங்கி வரும் நிலையில் தி.மு.க. உள்ளிட்ட அனைத்து கட்சிகளும் தேர்தல் பிரசாரத்தை தொடங்கி உள்ளன.

தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.

இந்த நிலையில் தேர்தலுக்கான ஆக்கப்பணிகள் குறித்து தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டம் இன்று அண்ணா அறிவாலயத்தில் துவங்கவுள்ளது. இதில் திமுக போட்டியிடும் தொகுதிகள், தேர்தல் கூட்டணி மற்றும் தேர்தல் பணிகள் குறித்து ஆலோசிக்கப்பட உள்ளது.
 இது தொடர்பாக தி.மு.க. பொதுச்செயலாளர் துரைமுருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில்
தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டம் இன்று சென்னை அண்ணா அறிவாலயம் கலைஞர் அரங்கத்தில் நடைபெறும். இதில் மாவட்ட செயலாளர்கள் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ளும்படி கேட்டுக் கொள்கிறேன். கூட்டத்தில் கழகத்தின் ஆக்கப்பணிகள் குறித்து ஆலோசிக்கப்படும்.
என அதில் கூறப்பட்டுள்ளது.


SHARE

Related posts

Leave a Comment