அமமுகவிற்கும், அதிமுகவிற்கும் எந்த தொடர்பும் இல்லை என எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
சேலம் மாவட்டம் ஓமலூரில் கட்சி நிர்வாகிகளுடனான ஆலோசனைக்கு பின் செய்தியாளர்கள் சந்தித்த முதலமைச்சர் பழனிசாமி, அதிமுகவில் எந்த பிளவையும், யாராலும் ஏற்படுத்த முடியாது. அதிமுகவிற்கு செல்லும் இடமெல்லாம், மக்களின் ஆதரவு அதிகமாக உள்ளது. அதிமுக கூட்டணியில் எந்த இழுபறியும் கிடையாது என்றார்
சசிகலா, இளவரசி சொத்துகள், நீதிமன்ற உத்தரவின் பேரில்தான் அரசுடைமை ஆக்கப்பட்டது. ஜனநாயக நாட்டில் அடக்குமுறை என்ற கேள்விக்கு இடமில்லை. எள்முனை அளவுக்கு கூட அதிமுகவில் பிளவு இல்லை. ஒற்றுமையாகவே உள்ளோம். கட்சிக்கு விரோதமாக செயல்படுபவர்கள் நீக்கம் செய்யப்படுவது எல்லா கட்சியிலும் உள்ள நடைமுறைதான். அதிமுக வேறு, அமமுக வேறு, அமமுகவில் இருந்து விலகி அதிமுகவில் இணைய விரும்பினால் அதிமுக தலைமை பரிசீலனை செய்யும் என்றார்
தான் எதையும் சந்திக்க தயார் எனவும் பழனிச்சாமி கூறினார். பாமக உடனான கூட்டணி பேச்சுவார்த்தையில் எந்த இழுபறியும் இல்லை; பேச்சுவார்த்தைக்கு பின் தொகுதிப்பங்கீடு பற்றி முடிவு செய்யப்படும் என்றும் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்தார்