என்னை யாரும் அடிமையாக நடத்த முடியாது, விலைகொடுத்து வாங்கவும் முடியாது என்று முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.
கோவை போத்தனூரில் பிரச்சாரம் மேற்கொண்ட முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, ஜமாத் நிர்வாகிகளுடன் கலந்துரையாடினார். அதில் பேசிய அவர், “ அண்ணா கூறியதுபோல் ‘பதவி என்பது, தோளில் போட்டிருக்கின்ற துண்டு’. என்னை யாரும் விலை வாங்கவோ, அடிப்படுத்தவோ முடியாது. மதம், சாதி என்ற பெயரில் யாரையும் பிரித்து பார்க்கவில்லை. எந்த மதத்தை சேர்ந்தவர்கள் ஆனாலும் அவர்கள் உரிமையை அதிமுக அரசு பாதுகாக்கும். குடும்பத்தில் ஒருவனாக இருந்து சேவையாற்றி வருகிறேன்என தெரிவித்தார்.
இந்த நிலையில் சமூக வலைதளங்களில் கருத்து வெளியிட்ட திமுகவினர் ஒரு அடிமை அடிமையான பின் தன்னை அடிமை இல்லை என்கிறதே …அடடே என பதிவிட்டுள்ளனர்.