தமிழைத் தேசிய மொழியாக்க கோரிக்கை வைக்குமா பாஜக? கனிமொழி கேள்வி

SHARE

தமிழகத்தில் பாஜக நவம்பர்.6-ம் தேதி முதல் டிசம்பர் 6-ம் தேதி வரை வேல் யாத்திரை நடைபெற உள்ளது. 
பாஜகவினரின் இந்த வேல் யாத்திரைக்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. இதனைத்தொடர்ந்து வேல் யாத்திரைக்குத் தடை விதிக்கவேண்டும் என்று உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்குத் தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்கு நாளை விசாரணைக்கு வர உள்ளன.

இந்நிலையில் வேல் யாத்திரை நடத்த அனுமதி கேட்கும் பாஜக, தமிழைத் தேசிய மொழியாக்க கோரிக்கை வைக்குமா? என திமுக மகளிரணிச் செயலாளரும் எம்.பி.யுமான கனிமொழி கேள்வி எழுப்பி உள்ளார். 
இது தொடர்பாக அவர் தனது டுவிட்டரில், “தமிழ்க் கடவுளாக கொண்டாடப்படும் முருகனுக்கு யாத்திரை நடத்தவேண்டும் என்று அனுமதி கேட்கும் தமிழக பாஜக, அது போலவே தமிழைத் தேசிய மொழியாக்கவும் கோரிக்கை வைக்குமா?” என்று பதிவிட்டுள்ளார்.


SHARE

Related posts

Leave a Comment