கேரளாவின் செக்ஸ் சைகோ பாத்திமா சகானாவை போக்சோ சட்டத்தில் கைது செய்ய வேண்டும் என கோரிக்கைள் வழுத்துள்ளது.
பெண்களும் சபரிமலை செல்லலாம் என்று சுப்ரீம் கோர்ட் தீர்ப்பளித்தது. இதனை தொடர்ந்து கேரளாவை சேர்ந்த அரை நிர்வாண பெண் என அழைக்கப்படும். பாத்திமா ரெஹானா என்ற பெண் சபரிமலை ஏற முயன்று தோல்வியடைந்தார். இதனால், இந்து அமைப்புகள் பாத்திமா மீது தாக்குதல் நடத்திய சம்பவமும் நடந்தது. பி.எஸ்.என்.எல் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்த பாத்திமா சமீபத்தில் அந்த நிறுவனத்திலிருந்து நீக்கப்பட்டார்.
ரெஹானா பாத்திமா, கடந்த ஜூன் 19 அன்று, தனது அரை நிர்வாண உடலில் தனது மகன் மற்றும் மகள் ஓவியம் வரைந்த ஒரு யூடியூப் வீடியோவை பேஸ்புக்கில் பகிர்ந்துள்ளார். அந்த வீடியோ #BodyArtPolitics என்ற ஹேஷ்டேக்குடன் ‘பாடி அண்டு பாலிடிக்ஸ்’ என்ற தலைப்பில் பகிரப்பட்டு இருந்தது. அரை நிர்வாண நிலையில் பாத்திமா இருக்க அவரின் சிறு வயது மகனும் மகளும் பாத்திமாவின் உடலில் ஓவியங்கள் வரைவது போல அந்த வீடியோ இருந்தது. மேலும் அதில் அவர் தன் அம்மாவின் உடலைப் பார்த்து வளரும் குழந்தைகள் பெண்களின் உடலை அவமதிக்காது. பெண்களின் உடலைப் பற்றிய விழிப்புணர்வை வீட்டிலிருந்தே கற்றுக் கொடுத்தால்தான் இந்த சமூகம் மாறும்’.
பாலியல் மற்றும் நிர்வாணம் தடைசெய்யப்பட்ட ஒரு சமூகத்தில் பெண்கள் பாலியல் மற்றும் அவர்களின் உடல்களைப் பற்றி வெளிப்படையாக இருக்க வேண்டும் என்பதை மீண்டும் வலியுறுத்துவதற்காகவே இந்த வீடியோ எடுக்கப்பட்டது.
இந்த வீடியோ பேஸ்புக்கில் வைரலானது
இதனால், கேரளாவில் மீண்டும் சர்ச்சை வெடித்தது. தொடர்ந்து தகவல் தொழில்நுட்ப சட்டத்தின் கீழ் ஜாமீனில் வெளிவராத வகையில் அவர் மீது திருவல்லா போலீஸ் வழக்குப்பதிவு செய்துள்ளது. பாத்திமா ரெஹானா மீது போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்ய வேண்டுமென்ற கோரிக்கையும் எழுந்தது.
இந்த் நிலையில் தான் கைதாகாமல் இருக்க கேரள ஐகோர்ட்டில் ரெஹானா முன் ஜாமின் கேட்டு நேற்று மனு செய்திருந்தார். அதில், ‘ என் குழந்தைகளுக்கு பாலியல் கல்வியை கற்றுக் கொடுக்கவே என் உடலில் ஓவியத்தை வரையச் செய்தேன். குழந்தைகளுக்கு பாலியல் குறித்த புரிதல் அவசியம் ‘என்று குறிப்பிட்டிருந்தார். ஆனால், மனுவை விசாரித்த நீதிபதி உன்னிகிருஷ்ணன். ‘குழந்தைகளுக்கு பாலியல் கல்வி கற்றுக் கொள்ள விரும்பியிருந்தால் அதை உங்கள் வீட்டுக்குள் செய்திருக்க வேண்டும். சமூகவலைத் தளங்களில் வெளியிட்டது ஏன்’ என்று கேள்வி எழுப்பியதுடன் ரெஹானா பாத்திமாவின் மனுவையும் தள்ளுபடி செய்தார்.
முன்ஜாமீன் மறுக்கப்பட்டிருப்பதால், எப்போது வேண்டுமானாலும், ரெஹானா பாத்திமா கைது செய்யப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.