மத்திய தொழில்நுட்பத்துறைக்கான பாராளுமன்ற நிலைக்குழு சமூக வலைத்தளங்களான பேஸ்புக் மற்றும் டுவிட்டருக்கு சம்மன் அனுப்பியுள்ளது.
சமூக வலைதள செய்திகளை தவறாக பயன்படுத்துவதை தடுப்பது மற்றும் குடிமக்களின் உரிமைகளை பாதுகாப்பது தொடர்பாக ஆலோசிக்க பேஸ்புக், டுவிட்டர் நிர்வாகிகளுக்கு பாராளுமன்ற நிலைக்குழு சம்மன் அனுப்பியுள்ளது.
தனிநபர் தரவுகளின் பாதுகாப்பு குறித்த சர்ச்சை எழுந்துள்ள நிலையில், தகவல் தொழில்நுட்ப துறைக்கான பாராளுமன்ற நிலைக்குழு சம்மன் விடுத்துள்ளது. வரும் 21 ஆம் தேதி பாராளுமன்ற நிலைக்குழு முன்பாக பேஸ்புக், டுவிட்டர் நிர்வாகிகள் ஆஜர் ஆவார்கள் எனத்தெரிகிறது.

previous post