விஜய் மல்லையாவை இந்தியா கொண்டு வரும் விவகாரம்-மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் கேள்வி

SHARE

விஜய் மல்லையாவை இந்தியாவுக்கு நாடு கடத்துவது தொடர்பாக, பிரிட்டனில் நடக்கும் ரகசிய சட்ட நடவடிக்கையின் தற்போதைய நிலை குறித்து, ஆறு வாரங்களுக்குள் அறிக்கை தாக்கல் செய்யும்படி, மத்திய அரசுக்கு, உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.
கர்நாடகாவைச் சேர்ந்த, தொழிலதிபர் விஜய் மல்லையா, 6,000 கோடி ரூபாய் வங்கிக் கடன் பெற்றார்,அவரது கம்பெனி திவாகும் நிலைக்கு சென்றதால் வங்கிகளிடம் வட்டியை குறைகுறைக்குமாறு கேட்டார் ஆனால்,வங்கிகள் அதனை கண்டுகொள்ளவில்லை.வட்டிக்கு மேல் வட்டி போட்டு கடன் தொகையை அதிகரித்தது. அதை திருப்பி செலுத்தாமல், வெளிநாடு தப்பி சென்றார்மல்லையா.

பிரிட்டன் தலைநகர், லண்டனில் உள்ள அவரை, இந்தியாவுக்கு நாடு கடத்துவதற்கான நடவடிக்கையில், அதிகாரிகள் ஈடுபட்டு உள்ளனர்.மல்லையா மீதான, நீதிமன்ற அவமதிப்பு வழக்கு ஒன்று, உச்ச நீதிமன்றத்தில், சமீபத்தில் விசாரணைக்கு வந்தது.

அப்போது, விஜய் மல்லையாவை ஆஜர் படுத்துவதற்கான நடவடிக்கைகள் குறித்து, மத்திய அரசு சார்பில் பிரமாண பத்திரம் தாக்கல் செய்யப்பட்டது.அதில், ‘விஜய் மல்லையா மீது, பிரிட்டனில் ரகசிய சட்ட நடவடிக்கைகள் நடந்து வருகிறது.’இதில், மத்திய அரசுக்கு தொடர்பு இல்லாததால், அதுபற்றிய தகவல் எதுவும் தெரியாது’ என, கூறப்பட்டு
இருந்தது. இந்த வழக்கு, உச்ச நீதிமன்ற நீதிபதிகள், யு.யு.லலித், அசோக் பூஷண் ஆகியோர் அடங்கிய அமர்வு முன், நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, பிரிட்டனில் நடந்து வரும் ரகசிய சட்ட நடவடிக்கைகளின் தற்போதைய நிலை குறித்து, ஆறு வாரங்களுக்குள் அறிக்கை தாக்கல் செய்யும்படி, மத்திய அரசுக்கு, உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.
நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் இருந்து விடுவிக்க கோரிய மல்லையா தரப்பு மனுவை, நீதிபதிகள் நிராகரித்து, வழக்கு விசாரணையை ஒத்திவைத்தனர்.


SHARE

Related posts

Leave a Comment