முன்னாள் அமைச்சர் கோகுல இந்திராவுக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
கடந்த சில நாட்களாக காய்ச்சல் மற்றும் சளியால் அவதிப்பட்டு வந்த அவருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதையடுத்து நேற்று அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. அதைத்தொடர்ந்து சென்னை கிண்டி அரசு கொரோனா சிறப்பு மருத்துவமனையில் சிகிச்சைக்காக கோகுல இந்திரா அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. கொரோனா பாதிக்கப்பட்ட கோகுல இந்திரா நலமுடன் இருப்பதாக கிண்டி அரசு கொரோனா சிறப்பு மருத்துவமனை இயக்குனர் டாக்டர் நாராயணசாமி தெரிவித்தார்.