கொரோனா கட்டுப்பாடுகளுக்கு எதிர்ப்பு நெதர்லாந்தில் பொதுமக்களின் போராட்டத்தில் வன்முறை

SHARE

நெதர்லாந்து நாட்டில் 2 டோஸ் கொரோனா தடுப்பூசிகளையும் செலுத்தியவர்கள் அல்லது அண்மையில் கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்தவர்கள் மட்டுமே பொது இடங்களில் அனுமதிக்கப்படுவார்கள் என அந்நாட்டு அரசு புதிய கட்டுப்பாடுகளை அறிவித்துள்ளது. 

அரசின் இந்த அறிவிப்பு நெதர்லாந்து மக்களிடையே பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. பல இடங்களில் அரசின் அறிவிப்புக்கு கண்டனம் தெரிவித்து போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. அந்த வகையில் நெதர்லாந்தில் உள்ள ராட்டர்டாம் நகரில் பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். 
அப்போது போராட்டக்காரர்கள் சிலர் போலீஸ் வாகனங்களுக்கு தீ வைத்தாக கூறப்படுகிறது. இதையடுத்து காவல்துறையினர் அங்குள்ளவர்களை அப்புறப்படுத்த முயன்ற போது இருதரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதனால் போராட்டத்தில் வன்முறை வெடித்தது. மேலும் சாலையில் நின்ற பல்வேறு வாகனங்களுக்கும் தீ வைக்கப்பட்டதால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. 
இதையடுத்து காவல்துறையினர் வானை நோக்கி துப்பாக்கியால் சுட்டும், தண்ணீரை பீய்ச்சி அடித்தும் போராட்டக்காரர்களை கலைத்தனர். இந்த வன்முறை சம்பவத்தில் 7 போலீசார் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக இதுவரை 10-க்கும் மேற்பட்டவர்கள் கைது செய்யப்பட்டிருப்பதாகவும், விசாரணை அடிப்படையில் மேலும் பலர் கைது செய்யப்படுவார்கள் எனவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். 


SHARE

Related posts

Leave a Comment