தீபாவளி பரிசு-பெட்ரோல் டீசல் விலைகளை குறைத்தது மத்திய அரசு

SHARE

நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் பெட்ரோல் மற்றும் டீசல்உள்ளிட்டவை ரூ.100க்கும் மேல் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் நிலவரத்திற்கு ஏற்ப பெட்ரோல் டீசல் விலை நிர்ணயிக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. இருப்பினும் இவற்றின் விலை உயர்வு மக்களை வாட்டி வருகின்றன. இருப்பினும் பல்வேறு மாநிலங்கள் மாநில அளவில் கலால் வரியை குறைத்து வருகின்றன.

இந்நிலையில் தீபாவளியை முன்னிட்டு மத்திய அரசு கலால் வரியை குறைத்து உள்ளது. தற்போதை நிலவரப்படி பெட்ரோல் 106.66 என்ற விலையிலும் டீசல் 102.59 என்ற விலையிலும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மத்திய அரசுதற்போது வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி பெட்ரோல் மீது ரூ.5-ம் , டீசல் மீது ரூ.10-ம் விலை குறைக்கப்பட்டுள்ளது. இந்த விலை குறைப்பு நாளை (நவ.04) முதல் அமல்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


SHARE

Related posts

Leave a Comment