இந்தியாவில் ஒரே நாளில் 32,695 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு உள்ளது.
மத்திய சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள தகவலில் இதுவரை இல்லாத அளவாக, கடந்த 24 மணி நேரத்தில் 32,695 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதனால் நாட்டில் கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை 9,68,876 ஆக உயர்ந்து உள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவுக்கு 606 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் பலியானோர் எண்ணிக்கை 24,915 ஆக உயர்ந்து உள்ளது. இதுவரை குணமடைந்தவர்கள் – 6,12,814 ஆக உள்ளது.
மும்பை,டெல்லி,சென்னை,உள்ளிட்ட முக்கிய நகரங்கள் தவிர பிற பகுதிகளில் கொரோனா பாதிப்புகள் குறைவாக இருந்தது.
மேலும் எதிர்பாரா உச்சத்தை தொட வாய்ப்பு
தற்போது கர்நாடகா,தெலங்கானா,மேற்கு வங்கம்,உத்தரபிரதேசம் ஆகிய மாநிலங்களில் நோயாளிகளின் எண்ணிக்கை மிக வேகமாக அதிகரித்து வருகிறது. குஜராத்திலும் திடீரென கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. இது மேலும் வேகமெகடுககக்கூடும் என்பதால் நாட்டில் கொரோனாவால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை நாள் ஒன்றுக்கு 50 ஆயிரத்திற்கு மேல் உயரும் என கணிக்கப்பட்டுள்ளது.இன்னும் ஒரு மாதத்தில் 1கோடிக்கு மேற்பட்டோர் பாதிக்கப்பட வாய்ப்பிருப்பதாக வல்லுனர்கள் தெரிவித்துள்ளனர்.