கொரோனா தொற்றால் மத்திய அமைச்சர்கள், மாநில முதல்வர்கள், அமைச்சர்கள் என மக்கள் பிரதிநிதிகளும் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
இந்த நிலையில், தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ் அழகிரிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா தொற்று உறுதியானதை அடுத்து தனியார் மருத்துவமனையில் கே.எஸ்.அழகிரி அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மேலும் கே.எஸ்.அழகிரியுடன் தொடர்பில் இருந்தவர்கள் கொரோனா பரிசோதனை செய்து கொள்ளுமாறு தமிழக காங்கிரஸ் ஊடகத்துறை தலைவர் கோபண்ணா வெளியிட்ட அறிக்கையில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
