தமிழகத்தில் தமிழ் இல்லை என்றால் வேறு எந்த நாட்டில் தமிழ் இருக்கும்?’ என மதுரை ஐகோர்ட் நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.
தமிழ்வழியில் படித்தவர்களுக்கு இடஒதுக்கீடு இருந்தும் தவறாக பயன்படுத்துவதாக கூறி மதுரை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு நீதிபதிகள் கிருபாகரன் மற்றும் புகழேந்தி அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.
அப்போது நீதிபதிகள் , ‘தமிழகத்தில் தமிழில் படித்தவர்கள் அருகி மருகி வருகின்றனர். தமிழ்வழி இடஒதுக்கீட்டை முறைப்படுத்தும் வரை குரூப் 1 தேர்வு நடைமுறைக்கு ஏன் தடை விதிக்கக்கூடாது?
தமிழகத்தில் தமிழ் இல்லை என்றால் வேறு எந்த நாட்டில் தமிழ் இருக்கும்?’ என கேள்விகள் எழுப்பினர். மேலும் ‘தமிழில் படித்தவர்களை ஊக்குவிக்க வழங்கப்படும் சலுகைகள் தவறாக பயன்படுத்தப்பட்டு வருகின்றன,’ எனக் கூறி தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை ஒத்திவைத்தனர்.