டிஜிபி கொலை -அமித்ஷா அதிர்ச்சி

SHARE

ஜம்மு – காஷ்மீரில் பாதுகாப்பு நிலவரம் மற்றும் அரசியல் நிலவரம் குறித்து நேரில் ஆய்வு செய்ய மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா சென்றிருக்கும் நிலையில், அந்த மாநிலத்தின் சிறைத் துறை டிஜிபி லோஹியா படுகொலை செய்யப்பட்ட சம்பவம் மத்திய அரசுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

1992ஆம் ஆண்டு ஐபிஎஸ் பிரிவைச் சேர்ந்த டிஜிபி லோஹியா, ஜம்மு நகரில், உதய்வாலா என்ற பகுதியில் வசித்து வந்தார். அவர் நேற்று இரவு தனது வீட்டில் இருந்தபோது படுகொலை செய்யப்பட்டு சடலமாகக் கண்டெடுக்கப்பட்டுள்ளார் கடந்த ஆகஸ்ட் மாதம் தான் அவர் சிறைத்துறை டிஜிபியாக பதவி உயர்வுபெற்று பொறுப்பேற்றார். . லோஹியா கொலை வழக்கில் முக்கிய குற்றவாளியான யாசிர் அகமது(23) இன்று கைது செய்யப்பட்டார்.இவர் லோஹியா வீட்டில் வீட்டு வேலை செய்து வந்தவர்.

காவல் துறையை பொறுத்தவரை ஒரு மாநிலத்தின் உயர்பதவியான டிஜிபி பதவியில் இருந்த ஒரு அதிகாரி கொலை செய்யப்பட்ட சம்பவம் அம்மாநிலத்தில் மட்டுமின்றி இந்திய முழுவதும் கவால் துறை அதிகாரிகள் மத்தியில் பரபரப்பை ஏற்படுதியுள்ளது.

https://www.dailythanthi.com/News/India/after-massive-manhunt-cops-arrest-domestic-help-of-slain-jk-prisons-dgp-807369

SHARE

Related posts

Leave a Comment