கொரோனாவுக்கு சித்த மருந்து கண்டறிந்த திருத்தனிகாச்சலம்-விடுதலை செய்தது உயர்நீதிமன்றம்

SHARE

கடந்த பிப்ரவரி மாதம் கொரோனா தீவிரமாக பரவ துவங்கியபோது இந்த வைரசை கட்டுப்படுத்த சித்த மருத்துவத்தில் மருந்து இருப்பதாக முதலில் அறிவித்தவர் திரு தனிகாச்சலம்.

பின்னர் சீன தூதரகத்திற்கு சென்று தன்னிடம் கோவிட் 19 வைரசுக்கு எதிர் மருந்து இருப்பதாக தெரிவித்தார்.

கபசுர குடிநீர் மற்றும் வாத சுர குடிநீர் குறித்து முதலில் பேசியது மட்டுமின்றி மத்திய அரசின் ஜசிஎம்ஆர் அதிகாரிகளை சந்தித்து தனது மருந்து குறித்து விளக்கினார் .

இதனை அரசு பயண்படுத்த தாயாராக இல்லை என அறிந்த அவர் யூடியூபில் சில வீடியோக்களை வெளியிட்டார். வெளிநாடுகளில் வசிக்கும் தமிழர்கள் பலர் இவரது மருந்தை உட்கொண்டு கொரோனா நோயில் இருந்து குணமடைந்தனர்.

இந்த நிலையில் அரசை விமர்சித்து அவர் வீடியோ வெளியிட்டதால் சித்த மருத்துவர் திருத்தணிகாசலத்தை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். அதன்பின்னர் குண்டர் சட்டத்தில் அவர் கைது செய்யப்பட்டார்.

இந்நிலையில்  திருத்தணிகாசலம் மீதான குண்டர் சட்டத்தை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்துள்ளது.திருத்தணிகாசலம் மீதான குண்டர் சட்டத்தை ரத்து செய்யக்கோரி அவரது தந்தை தொடர்ந்த வழக்கில் சென்னை ஐகோர்ட்  இந்த உத்தரவிட்டுள்ளது. 


SHARE

Related posts

Leave a Comment