திருவள்ளுவர் சமுதாயத்தை தனி ஜாதியாக அங்கீகரிக்க வேண்டும். வேறு எந்த ஜாதியுடனும் இணைத்து அறிவிக்கக் கூடாது என்பதை வலியுறுத்தி அனைத்து வள்ளுவர் சமுதாய அமைப்பினர் அரசிடம் மனு அளித்தனர்.
நாஞ்சில் நாட்டை பூர்வீகமாக கொண்டவர்கள் இவர்கள். இவர்களது பிரதான தொழில் ஜோதிடம் பார்ப்பது. பல்லவ சோழ மன்னர்களின் அரசவையில் இவர்கள் மதிப்புமிக்க இடத்தில் இருந்துள்ளனர். இது தவிர பண்டைய காலத்தில் கோவில்களில் அர்ச்சகர் என்ற நடைமுறை வருவதற்கு முன் பூசாரிகளாக இருந்து கோவில்களில் வழிபாட்டையும் நடத்தி தொழிலாகக் கொண்டவர்கள் இவர்கள்.
தற்பொழுது இவர்களது ஜாதியை வேறு ஒரு ஜாதி உடன் இணைத்து அறிவிக்க இருப்பதாக ஒரு சில அமைப்பினர் முயற்சித்து வருகின்றனர். இதை கண்டித்து தங்களது ஜாதியை தனி ஜாதியாக அறிவிக்க வேண்டும் என்றும் வேறு எந்த ஜாதி யுடனும் இணைத்து பட்டியலில் இடம் பெறச் செய்யக் கூடாது என்பதை வலியுறுத்தியும் தமிழக முதல்வருக்கு மனு அனுப்பி உள்ளனர். இது தவிர அந்தந்த மாவட்ட ஆட்சியர்களிடமும் இதே கோரிக்கையை வலியுறுத்தி மனுக்களை அளித்து வருகின்றனர்.