விடுதலை சிறுத்தைகள் கட்சித்தலைவர் திருமாவளவன் பெண்கள் குறித்து சமீபத்தில் தெரிவித்த கருத்துக்கள் மிகுந்த சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு பாஜக, இந்து முன்னணி உள்ளிட்டோர் எதிர்ப்பு தெரிவித்து தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் ஈரோடு மாவட்டம் கோபி அருகே கவுந்தப்பாடியில் தனது நண்பரின் இல்ல திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் வந்துள்ளார்.
அப்போது அவருக்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் மற்றும் இந்து முன்னணியினர் முழக்கம் எழுப்பியதால் இருதரப்பினர் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
இதனையடுத்து விசிகவினர் வந்த வாகனங்கள் மீது இந்து முன்னணியினர் கற்களை வீசி தாக்கியுள்ளனர். இதனால் பதற்றம் நிலவியது.
இதனால் ஏராளமான காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக 10 பேரிடம் விசாரணையும் நடைபெற்று வருகிறது.