கொரோனா வைரஸ் தடுப்பு மருந்து-ஜஸ்டின் ட்ரூடோ வேண்டுகோள்

SHARE

கொரோனா வைரஸ் தடுப்பு மருந்து கண்டுபிடிக்கப்பட்டதும் அனைத்து நாடுகளுக்கும் சமமாக அதனை வழங்க வேண்டும் என உலக நாடுகளை கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ கேட்டுக்கொண்டிருக்கிறார் .

நூற்றுக்கும் மேற்பட்ட மருத்துவ ஆராய்ச்சி நிறுவனங்கள் போவிட் 19 தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் ஆராய்ச்சியில் ஈடுபட்டு இருக்கின்றன. இதில் ஆக்ஸ்போர்ட் பல்கலைகழகத்தில் மனிதர்களிடம் மூன்றாம் கட்ட பரிசோதனை நடத்தப்பட்டு விரைவில் முடிவு வெளியாக உள்ளது இதேபோல் ரஷ்யாவும் தனது ஆராய்ச்சியை முடித்திருக்கிறது மனிதர்களிடம் ஆராய்ச்சியை துவங்கி ஒன்றரை மாதங்களுக்கு மேல் ஆகி விட்டது எனவே அடுத்த மாதம் மருந்து கிடைத்துவிடும் என்கிற நம்பிக்கையில் ரஷ்யா இருக்கிறது.

இதே போல் இந்தியாவும் தனது கடைசி கட்ட ஆராய்ச்சியில் மும்முரமாக இருக்கிறது கடந்த 20 நாட்களுக்கு முன்பு மருந்தை மனிதர்களுக்கு செலுத்தி தனது ஆய்வை துவங்கியிருக்கிறது இந்த நிலையில் வைரசுக்கான தடுப்பு மருந்து கண்டுபிடிக்கப் பட்டதும் அனைத்து நாடுகளுக்கும் சமமாக அதனை வழங்க வேண்டுமென கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, தென்னாபிரிக்க ஜனாதிபதி ராமபோசா, ஸ்பெயின் நியூசிலாந்து எத்தியோப்பியா உள்ளிட்ட 8 நாடுகளின் தலைவர்கள் கூட்டாக இந்த கோரிக்கை விடுத்திருக்கிறார்கள்.

நாடுகளுக்கு இடையே வேறுபாடு காட்டாமல் அனைத்து நாடுகளுக்கும் குறித்த மருந்து வழங்கப்பட வேண்டும் எனவும் அவர்கள் கேட்டுக் கொண்டிருக்கிறார்கள். இது குறித்து சற்று முன்னர் ட்விட்டரில் பதிவிட்டுள்ள ஜஸ்டின் ட்ரூடோ அனைத்து நாட்டு மக்களுக்கும் வேறுபாடு இல்லாமல் மருந்து கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் என உலக நாடுகளை அவர் கேட்டுக் கொண்டிருக்கிறார்


SHARE

Related posts

Leave a Comment