கொரோனா தடுப்பூசி ஒரு சாத்தான் – உண்மையை சொன்ன தலைமை நீதிபதியால் பரபரப்பு

SHARE

தென்னாப்பிரிக்கா நாட்டில் ,ஜோகன்னஸ்பர்கில் உள்ள ஒரு கிறிஸ்துவ தேவாலயத்தில் அந்நாட்டின் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியான மோகோயங் மோகோயங் 59 நேற்று முன்தினம் உரை நிகழ்த்தினார்;அப்போது,தடுப்பூசிகளை கடவுளாக நான் பார்க்கவில்லை. சாத்தானாகவே பார்க்கிறேன். தடுப்பூசி செலுத்தப்பட்டால் மக்களின் மரபணுக்கள் சீர்குலைந்துவிடும். எனவே அத்தகைய தடுப்பூசிகளை கடவுள் அழித்துவிடவேண்டும் என்றார்.

தலைமை நீதிபதி பேசும் இந்த ‘வீடியோ’ சமூக வலைதளங்களில் வேகமாக பரவியது. அவரது இந்த கருத்துக்கு பல ஆதரவு தெரிவித்த போதும் ஆராய்ச்சியாளர்கள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

இதுகுறித்து விட்ஸ் பல்கலைக்கழகத்தின் நச்சுயிரியல் பேராசிரியர் பேர்ரி ஸ்கவுப் கூறுகையில், “ஆராய்ச்சியாளர்கள் தடுப்பூசியை உருவாக்கும் முயற்சிகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ள நிலையில் மிக உயர்ந்த பொறுப்பில் உள்ள ஒருவர் மக்களை தவறாக வழிநடத்தும் வகையில் கருத்துக்களை வெளியிடுவது துரதிஷ்டவசமானது” என்றார். எனினும் தலைமை நீதிபதி மோகோயங் மோகோயங் தன் கருத்தில் இருந்து பின்வாங்க மறுத்துவிட்டார்.


SHARE

Related posts

Leave a Comment