ஒபாமா, புஷ், கிளின்டன்,கேமரா முன் தடுப்பூசி போட்டுக்கொள்ள முடிவு

SHARE

 அமெரிக்க மக்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்தும் விதமாக முன்னாள் அதிபர்களான ஒபாமா, புஷ், கிளின்டன் ஆகியோர் கேமரா முன் தடுப்பூசி போட்டுக்கொள்ள முடிவு செய்துள்ளனர்.


அமெரிக்காவில் கொரோனா வைரசின் தீவிரம் குறையவில்லை. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 2 லட்சம் பேருக்கு புதிதாக தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. அவர்களில் 1 லட்சம் பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை இல்லாத மோசமான நிலை என்று அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இந்த நிலையில் கொரோனா தடுப்பூசியை கொண்டு வருவதில் உணவு மற்றும் மருந்து நிர்வாகம் (எப்.டி.ஏ.,) மும்முரமாக இறங்கியுள்ளது.
அமெரிக்க மருந்து நிறுவனமான பைசர் தடுப்பூசிக்கு பிரிட்டன் ஒப்புதல் வழங்கிவிட்டது. இதனால் எப்.டி.ஏ.,வை டிரம்ப் விமர்சித்துள்ளார்.
பல்வேறு தடுப்பூசிகளும் 90 சதவீதத்துக்கு மேல் செயல்திறன் கொண்டவை என அறிக்கைகள் தெரிவிக்கின்றன. இருப்பினும் தடுப்பூசி தொடர்பாக மக்களின் நம்பிக்கையை அதிகரிக்கும் பிரசாரத்தில் முன்னாள் அதிபர்கள் ஈடுபட உள்ளனர். ஒபாமா, புஷ், பில் கிளின்டன் ஆகியோர் எப்.டி.ஏ., ஒப்புதல் அளிக்கும் தடுப்பூசியை பொது மக்கள் முன்னிலையில் செலுத்திக்கொள்ள தயார் என அறிவித்துள்ளனர்.


இது பற்றி செய்தியாளர்களிடம் பேசிய ஒபாமா ,தேசிய தொற்றுநோய்கள் நிபுணர் அந்தோனி பாசியை முழுமையாக நம்புகிறேன். நான் அவருடன் பணியாற்றியுள்ளேன். இந்த தடுப்பூசி பாதுகாப்பானது என்று அந்தோனி பாசி எதைச் சொல்கிறாரோ அந்த தடுப்பூசியை போட்டுக்கொள்வேன்.

உங்களுக்கு கொரோனா ஏற்படாமல் தடுப்பூசி தடுக்கும். நான் அறிவியலை நம்புகிறேன். அதனை மக்களுக்கு காட்ட தொலைக்காட்சி முன்பு தடுப்பூசி செலுத்திக்கொள்வேன். என கூறினார். மற்ற முன்னாள் அதிபர்களின் செயலர்களும் இதையே தெரிவித்துள்ளனர்.


SHARE

Related posts

Leave a Comment