ஆக்கப்பூர்வமான செயல்களுக்கு புதிய அமெரிக்க அதிபர் ஜோ பைடன் உடன் இணைந்து செயல்பட தான் தயாராக இருப்பதாக ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் தெரிவித்துள்ளார். ரஷ்யாவுக்கும் அமெரிக்காவுக்கும் கடந்த சில நாட்களாக மோதல் போக்கு நீடித்த வண்ணம் உள்ளது.
இந்த நிலையில்,கடந்த செவ்வாயன்று அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி பெற்றதற்கு ஜோ பைடனை ரஷ்ய அதிபர் புடின் வாழ்த்தினார். உலக பாதுகாப்பை அதிகரிக்க உலக நாடுகள் தங்களது விருப்பு வெறுப்புகளை தள்ளிவைத்துவிட்டு ஒன்றாக பணியாற்ற வேண்டும் என்று அவர் தெரிவித்தார்.
சமீபத்தில் அமெரிக்க எலக்டோரல் காலேஜ், ஜோ பைடன் வெற்றியை உறுதி செய்தது. கடந்த 2014-ஆம் ஆண்டு அமெரிக்க அதிபர் தேர்தலில் அமெரிக்கா அதிபராக டிரம்ப் தேர்ந்தெடுக்கப்பட ரஷ்யா உதவியது என்ற குற்றச்சாட்டு நீண்ட நெடுங்காலமாகவே இருந்து வந்தது. இதனை டிரம்ப் மறுத்தார். விளாடிமிர் புடின் கடந்த தேர்தல் பிரசாரத்தில் கடுமையாக சாடினார். தற்போது ஜோ பைடன் ரஷ்யாவுடன் சுமூக உறவில் ஈடுபடுவாரா அல்லது எதிர்ப்பாரா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.