கடைசி நேரத்திலும் அடங்காத ட்ரம்ப்

SHARE

அமெரிக்க அதிபர் தேர்தலில் தோல்வி அடைந்த பின்னரும் அதிபர் டிரம்ப், பல்வேறு நாடுகளில் இருந்து அமெரிக்க படைகளை வாபஸ் வாங்க திட்டமிட்டுள்ளர். இதனை தொடர்ந்து கடந்த 20 ஆண்டுகளில் இல்லாத அளவு ஈராக் மற்றும் ஆப்கானிஸ்தானில் அமெரிக்க படைகளில் எண்ணிக்கையை குறைக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக பெண்டகன் அறிவித்துள்ளது.

முதல் கட்டமாக ஆப்கானிஸ்தானில் இருந்து 4,500 முதல் 2,500 ராணுவ வீரர்களை வாபஸ் பெறவும், ஈரானில் இருந்து 2500 ராணுவ வீரர்களை ஜனவரி 15ம் தேதிக்குள் வாபஸ் பெறவும் டிரம்ப் திட்டமிட்டு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
டிரம்ப் பாதுகாப்பு செயலாளர் மார்க் எஸ்பரை நீக்கிவிட்டு அவருக்கு பதிலாக பென்டகனின் புதிய பாதுகாப்பு செயலாளராக கிறிஸ்டோபர் மில்லர் கொண்டு வரப்பட்டார்.அதன் பின் இந்த அதிரடி மாற்றங்கள் நடக்கிறது. டிரம்ப் எடுக்கும் தவறான முடிவு இது என்று பென்டகனின் முன்னாள் அதிகாரிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் படைகளை வாபஸ் பெறுவது குறித்த அமெரிக்காவின் அறிவிப்பிற்கு தலிபான் அமைப்பினர் வரவேற்பு தெரிவித்துள்ளனர். போரை முடிவிற்கு கொண்டு வருவதற்காகவும், இரு நாட்டு மக்களின் நன்மைக்காகவும் இது ஒரு நல்ல நடவடிக்கையாக அமையும் என்று தலிபான் செய்தி தொடர்பாளர் ஜாபிஹுல்லா முஜாஹித் தெரிவித்துள்ளார்.


SHARE

Related posts

Leave a Comment